பாரிய வர்த்தகர்கள் மூவருக்கு புதிய மதுபான அனுமதிப்பத்திரம்?
வர்த்தகர்களுக்கு மூவருக்கு புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, உரிமங்கள் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தற்போது மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மூன்று பாரிய வர்த்தகர்களுக்கு மூன்று புதிய தொழிற்சாலைகளை நடத்துவதற்கு இந்த உரிமங்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தற்போது இலங்கையில் 25 மதுபான ஆலைகள் இயங்கி வருவதாகவும், சில மதுபான உற்பத்தியாளர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக நிதியமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
