இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி - வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL)இலங்கையின் கடலோர பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களை அழைக்கும் புதிய உரிமச்சுற்றை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்யவும், தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்ட கட்டமைப்பை புதுப்பிக்கும் நடவடிக்கை
மேற்கு கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பணிகள், வணிக ரீதியான இயற்கை எரிவாயு இருப்புகள் இருப்பதை உறுதி செய்துள்ளன.

இவை எரிபொருள் இறக்குமதியை நாடு பெருமளவில் சார்ந்திருப்பதை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய உரிமச்செயல்முறை தொடர்பான மேலதிக விபரங்கள் பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.
2021 ஆம் ஆண்டின் பெட்ரோலிய வளங்கள் சட்டம் எண் 21 இன் கீழ் சட்டக் கட்டமைப்பைப் புதுப்பிக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்த அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.