உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள்! வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் புலனாய்வு தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் விசாரணைகளை நடத்தியுள்ளது.
FBI அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் ஸ்கொட்லாந்து யார்ட் ஆகியவை நடத்திய விசாரணைகள் இவை அனைத்திற்கும் மத்தியில் மிக முக்கியமானதாகும்.
இவர்கள் இரண்டு விசாரணைகளை நடத்தியுள்ளதுடன், அவற்றிலொன்று டிஜிட்டல் சான்றுகள் பகுப்பாய்வு (Digital evidence analysis) ஆகும். இரண்டாவது இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் (Explosive devices) தொடர்பான விசாரணைகள் ஆகும்.
இந்த அறிக்கைகளை தயவு செய்து வரவழைத்து ஜனாதிபதியை பரிசீலிக்குமாறு சட்டத்தரணி சன்ஜீவ வீரவிக்ரம தெரிவித்துள்ளார்.
வெடிப்பொருட்களின் தன்மை
“சலேக்கு நீதி” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுரேஷ் சலே தடுத்து வைத்திருக்கும் முறைமை தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்..,
அனைத்து டிஜிட்டல் பயன்பாடுகள் (Digital apps) தொடர்பான விசாரணையை அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் துறையும், அமெரிக்காவின் FBI தெளிவாகக் கூறியுள்ளது என்னவென்றால், இது இலங்கையில் தயாரித்து பயன்படுத்தப்பட்டவை அல்ல.
இலங்கையில் இராணுவத்தினர் வெடிபொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர், மேலும் சில ஆயுதமேந்திய அமைப்புகளும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியுள்ளன. அவர்கள் பயன்படுத்திய அதிகபட்ச பொருட்கள் RDX மற்றும் TNT ஆகும். ஆனால் இங்கு பயன்படுத்தப்பட்டிருப்பது TATP (Triacetone Triperoxide) ஆகும்.
தடுப்புக்காவல் உத்தரவு
இதற்கு பயன்படுத்தப்பட்ட திரவம் மிகவும் சக்திவாய்ந்த Liquid Precursor என்ற வகையாகும். 2019 ஆம் ஆண்டளவில் உலகளவில் இதை ஒரு குறிப்பிட்ட அமைப்பே பயன்படுத்தியிருந்தது.
இதனால் தான் FBI மற்றும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் ஆகியவை மிகவும் தெளிவாகக் கூறின இந்த தாக்குதல் குறித்த அமைப்புடன் தொடர்புடையது என்றும், அவர்களிடம் இருந்து தகவல்களையும் அறிவையும் பெற்று இங்குள்ள ஒரு அமைப்பால் செய்யப்பட்டது என்றும்.
இந்த அமைப்பு தான், தௌஹீத் ஜமா அத் தலைவர் வழிநடத்திய அமைப்பாகும். இந்த கருத்தை புறக்கணித்துவிட்டு, நீதிமன்ற விடயங்களில் தலையிடவோ, தடுப்புக்காவல் உத்தரவு (Detention order) பிறப்பிக்கவோ அல்லது இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ முடியாது.
தயவுசெய்து அந்த அறிக்கையை வரவழைத்துப் பாருங்கள். அமெரிக்க நீதிமன்றத்தில் ராஜ் படேல் சமர்ப்பித்த சாட்சியங்கள் மற்றும் சாட்சிய பகுப்பாய்வுகளைப் பாருங்கள். அப்போது உங்களுக்கு அந்த முழு கதையும் புரியும் என குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Kanthan அவரால் எழுதப்பட்டு, 24 August, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.