அதிக வாய்ப்புகள் வழங்கப்படும்! இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக தனி சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த வாய்ப்பு உருவாக்கப்படும்.
ரணிலின் இலட்சியம்
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இலட்சியமாகும்.
இந்த நிலையில் அதற்கு இலங்கை நவீன தொழிநுட்பத்துடன் கூடிய புதிய தயாரிப்புகளை நோக்கி நகர வேண்டும்.
இதற்கு தொழிநுட்பத்துறையில் ஆராய்ச்சியே பிரதானமானது. நாட்டில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், அந்த துறையில் நிபுணர்களைக் கொண்ட பணிக்குழு நியமிக்கப்படும்.
இது தொடர்பான கருத்துருவை தயாரிக்குமாறு ஜனாதிபதி தொழிநுட்ப
அமைச்சுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
