சட்டவிரோத கட்டிடங்களை அனுமதிக்கும் புதிய சட்டம்
கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை இடித்துத் தள்ளுவதற்குப் பதிலாக அபராதம் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசுக்கு மில்லியன் கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் கடலோரப் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படவுள்ளது. இந்தப் புதிய சட்டம் ஜனவரி 2026 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. சட்டமா அதிபரினால் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
புதிய சட்டத்திருத்தம்
அதன்படி, சுனாமி பேரழிவிற்குப் பின்னர் கட்டுமானம் தொடர்பாக நடைமுறையில் இருந்த சட்டத்தில் மாற்றமில்லை.
முன்மொழியப்பட்ட சட்ட சீர்திருத்தத்தில் வருடாந்த அனுமதி வழங்கும் திட்டம் உருவாக்கப்படும் என்று கடலோர பாதுகாப்பு மற்றும் கடல் வள முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாத் துறையின் விரிவாக்கம் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பான சட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால் 100 மீட்டர் வரம்பு நடைமுறை கைவிடப்பட்டுள்ளன.இதனாலே சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
கடற்கரையில் சுமார் 1,600 சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து அணியின் மது அருந்தும் கலாச்சாரம் குறித்த குற்றச்சாட்டு: பென் ஸ்டோக்ஸ் பதிலடி News Lankasri