பாடசாலை மாணவர்களுக்காக சீனாவில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டம்
சீனாவில் மாணவர்களுக்கு அதிகப்படியான அழுத்தங்களை குறைக்கும் நோக்கில் புதியச்சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாடசாலையை விட்டு வீட்டுக்கு சென்ற பின்னர் தீவிர வீட்டுப்பாடப் பயிற்சியின் அழுத்தங்களை குறைப்பதே இதன் நோக்கமாகும் என்று சீனாவின் அரச ஊடகங்கள் தொிவித்துள்ளன.
இதன்படி பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஓய்வு மற்றும் உடற்பயிற்சிக்கான நேரத்தை ஒதுக்குவதை உறுதிச்செய்யுமாறும் கோரப்பட்டுள்ளனர்.
அத்துடன் இணையங்களுக்காக அதிக நேரம் செலவிடுவதையும் தவிர்ப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே சீன அரசாங்கம், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆறு மற்றும் ஏழு வயது
பிள்ளைகளுக்கான எழுத்துத் பரீட்சைகளை தடை செய்தது.
மாணவர்களின் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதாகக் கூறியே இந்த தடை
விதிக்கப்பட்டுள்ளது.