இலங்கையில் உருவாகப் போகும் கடுமையான சட்டங்கள்: அரசாங்கத்தின் தீர்மானம்
குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்க அரசாங்கத்தால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்திகளைப் பாதுகாக்கும் நோக்கில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நாலந்தா மற்றும் களுதேவல தொழிற்பேட்டைகளுக்கு மேற்கொண்ட விசேட கள விஜயத்தின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உடன் முறைப்பாடு செய்யுங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் விலையை விட, இறக்குமதி செய்யப்படும் அதே பொருட்களின் விலை குறைவாக இருந்தால், அது குறித்து உடனடியாக முறைப்பாடு செய்யுங்கள்.
பாதணிகள், டைல்ஸ், லைட்டர்கள் மற்றும் தீப்பெட்டிகள் போன்றவை விதிக்கப்பட்ட வரிகளை விடக் குறைவான விலையில் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான முறைகேடுகள் குறித்து முறையாக ஆராய்ந்து முறைப்பாடு செய்வது உற்பத்தியாளர்களின் பொறுப்பாகும். இந்த விவகாரத்தை அரசாங்கத்தால் மாத்திரம் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது.
உற்பத்தியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கூறியுள்ளார்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 12 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam