கார்க் தீவு - ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் தாக்குதல்! அதிரடி நடவடிக்கைக்கு தயாராகி வரும் பென்டகன்
மத்திய கிழக்கில் போர் ஐந்தாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், கார்க் தீவு மற்றும் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள கடலோரப் பகுதிகள் மீதான தாக்குதல்கள் உட்பட, ஈரானில் பல வார கால தரைவழி நடவடிக்கைகளுக்கு பென்டகன் தயாராகி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டங்களில் சிறப்பு நடவடிக்கைப் படையினர் மற்றும் வழக்கமான காலாட்படையினரின் திடீர்த் தாக்குதல்கள் இடம்பெறலாம்.
கார்க் தீவு
ஆனால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த திட்டங்களில் எதற்காவது ஒப்புதல் அளிப்பாரா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது என, பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி 'தி போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
எந்தவொரு தரைவழி நடவடிக்கையும் ஒரு முழு அளவிலான படையெடுப்பாக இருக்காது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் முனையம் அமைந்துள்ள கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்தும் , கடந்த மாதம் மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து தெஹ்ரானால் திறம்படத் தடுக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள பிற கடலோரப் பகுதிகளில், வணிக மற்றும் இராணுவக் கப்பல் போக்குவரத்தைத் தாக்கக்கூடிய ஆயுதங்களைக் "கண்டறிந்து அழிப்பதற்காக" சோதனைகள் நடத்துவது குறித்தும் ட்ரம்ப் நிர்வாகம் விவாதித்து வருவதாக 'தி போஸ்ட்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
பரிசீலனையில் உள்ள நோக்கங்களை நிறைவு செய்வதற்கு "மாதங்கள் அல்ல, வாரங்களே" ஆகக்கூடும் என்று ஒருவர் போஸ்ட் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், சாத்தியமான காலக்கெடு "இரண்டு மாதங்கள்" ஆகலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள கார்க் தீவை அமெரிக்கப் படைகள் கைப்பற்றக்கூடும் என ஊகங்கள் நிலவி வருகின்றன.
இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களாலும் அது குறிவைக்கப்பட்டது ட்ரம்ப் அதனை தெஹ்ரானின் "கிரீட ஆபரணம்" என்று வர்ணித்தார்.
வளைகுடா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கான முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்குமாறு ஈரானுக்கு ட்ரம்ப் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார் .
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 12 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam