இலங்கை மின்சார பட்டியலில் இணைக்கப்படவுள்ள புதிய வட்டி
நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக மின் கட்டணத்தை செலுத்த முடியாத நுகர்வோருக்கு 24 மாதங்களுக்குள் தவணையில் முறையில் நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.
மின் கட்டண நிலுவைத் தொகையை மாதாந்த தவணையில் செலுத்துவதற்காக வட்டி பணத்தொகையொன்று வசூலிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் வசூலிக்கப்படும் வட்டி பணம் குறித்து நுகர்வோருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் இலங்கை மின்சார சபை கடந்த இரண்டு மாதங்களுக்காக 44 பில்லியன் ரூபாய் கட்டணங்களை அறவிடாமல் உள்ளது.
மின் கட்டணத்தை செலுத்தக் கூடிய மக்களால் கூட மின் கட்டணம் செலுத்தப்படாததால் மின்சார சபை கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan