மகிந்தவின் திடீர் மாற்றம்! கோட்டாபயவின் பதவியை பறிப்பது தொடர்பில் புதிய தகவல் (Video)
'நேற்று வரைக்கும் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக கூறிவந்தார். நேற்று பிற்பகல் மகா சங்கத்தினுடைய பிக்குகளின் அறிக்கை வெளிவந்தது. அறிக்கை வெளிவந்ததன் பின்னர் அங்கு ஒரு மந்திர ஆலோசனையை ராஜபக்சவின் குடும்பம் நடத்தியதாக கூறப்படுகின்றது.
அதில் ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று சமல் ராஜபக்ச சொன்னதாகவும் பசில் ராஜபக்ச இவர் பதவி விலக கூடாது என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் எதுவாக இருந்தாலும் மகா சங்கத்தினரின் அறிக்கை வந்த பின்னரே மகிந்த ராஜபக்ச தான் என்ன நடந்தாலும் பதவி விலக மாட்டேன் என்று கூறிவருவதாக கூறப்படுகிறது" என வரலாற்று ஆய்வாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
"பௌத்த மகா சங்கத்தினுடைய முடிவின் அடிப்படையில் எத்தனை அமைச்சர்கள் அல்லது எம்.பிக்கள் அரசாங்கத்தின் பக்கம் மாறுவார்கள் என்று தெரியவில்லையென உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் இலங்கையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மகா சங்கங்கள் இருப்பதை அவர் நேரடியாக குறிப்பிடுகின்றார் " எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



