கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான புதிய தகவல்
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(30.11.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு விநியோகம்
இதற்கமைய ஒரு நாள் சேவையின் கீழ் தினமும் 2,500 முதல் 3,000 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நாளொன்றில் சராசரியாக 1,500 கடவுச்சீட்டுகள் ஒரு நாள் சேவையின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ளன.
20,000 ரூபாய் அபராதம்

இதேவேளை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்குவதற்கு 20,000 ரூபா அறவிடப்படுகின்றது.
மேலும், ஒரு வருடத்திற்குள் கடவுச்சீட்டு தொலைந்து போனால் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri