அம்பாறை மாவட்ட மீள்குடியேற்ற பணிகள் நிறைவு - பிரசன்ன ரணதுங்க
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான மோதலின் போது பாரிய பாதிப்புக்குள்ளான அம்பாறை மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு இன்று(2023.06.21) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது.
மேலும், கண்ணிவெடிகள் இல்லாத பிரதேசமாக அம்பாறை மாவட்டத்தை உறுதிப்படுத்தியதன் பின்னரே மக்களை கிராமங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
343 வீடுகள் நிர்மாணம்

அரச சார்பற்ற வெளிநாட்டு நிறுவனங்கள், அரச சார்பற்ற உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவு ஆகியவற்றின் ஆதரவுடன், புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அம்பாறை மாவட்டம் யுத்தத்தின் போது பாரிய சேதங்களுக்கு உள்ளான மாவட்டமாகும்.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் தங்கவேலாயுதபுரம், கஞ்சி குடிச்சாறு, காஞ்சிரம்குடா, சாகாமம் ஆகிய நான்கு கிராமங்களிலும் 343 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மேலும் 72 வீடுகள் கட்டப்பட உள்ளன. மீள்குடியேற்றப்படும் பயனாளிகளுக்கு தற்காலிக வீடுகள் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக 38000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதி

வீடுகளை வழங்குவதற்கான அளவுகோல்கள் தயாரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் அனுமதி பெறப்பட்டது.
மேலும், நிரந்தர வீடுகள் கட்டி, குடிநீர், மின்சாரம், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பாடுபட்டு வருகிறது.
இப்பகுதியில் 71 பயனாளி குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளதுடன், 93 பொதுக்கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கிரவல் கற்களை பயன்படுத்தி சாலைகள் போடப்பட்டுள்ளன. வறண்ட காலநிலையில் பயனாளிகளுக்கு பாரவூர்திகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
யானைகளிடமிருந்து கிராமங்களை பாதுகாப்பதற்காக 38 கிலோமீற்றர்
நீளமான யானை வேலியும் தயார் செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.

வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 15 மணி நேரம் முன்
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam