கொழும்பில் அதிநவீன இருதய மருத்துவமனை விரைவில்..!
கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அருகில் இருதய நோயாளிகளுக்கான தனியான, அதிநவீன மருத்துவமனை விரைவில் கட்டப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் உள்ள மல்வத்து மகா விகாரையில் உள்ள மல்வத்து மகாநாயக்கர்கள்ளை நேற்று(02.10.2025) சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் செயல்படுத்தப்படும் மக்கள் சார்ந்த எதிர்கால சுகாதாரத் திட்டம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் புதுமையான கருத்தாக்கமாக நாடு முழுவதும் செயற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளர்களின் நெரிசல்
இந்த ஆண்டு நாட்டில் 100 சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், முன்னோடித் திட்டத்தின் கீழ், நான்காவது சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் கண்டியின் பொல்கொல்லவத்தை கிராமத்திலும், ஐந்தாவது சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் மாத்தளையின் தங்கந்த கிராமத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முக்கிய மருத்துவமனைகளில் நோயாளர்களின் நெரிசலைக் குறைக்க இதுபோன்ற திட்டங்கள் மிகவும் உதவியாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



