மட்டக்களப்பில் புதிய உடற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு
மட்டக்களப்பில் (Batticaloa) தொற்றா நோய்களிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு, சுகாதார அமைச்சினால், புதிய திறந்த வெளி உடற்பயிற்சி நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த புதிய உடற்பயிற்சி நிலையமானது, உலக வங்கியின் 30 லட்சம் ரூபா அளவிலான நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு கோட்டை பூங்கா வளாகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களில் 85 வீதமானவை தொற்றா நோய்களின் காரணமாக இடம்பெறுவதால் சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவை பிரிவினால் பொதுமக்களை தொற்றா நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு இந்த விசேட செயற்றிட்டம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் தொற்றா நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார், பணிமனையின் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் நவலோஜிதன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |