சுற்றுலா பயணிகளுக்கு இயக்கச்சியில் அறிமுகமாகும் புதிய விளையாட்டுக்கள்! வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசு (Video)
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசசபைக்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது றீ(ச்)ஷா பண்ணை.
இயற்கை எழில் மிகுந்த தோற்றங்களையும், சூழலையும் அதனோடிணைந்த பண்ணையின் செயற்பாடுகளையும் நகர வாழ் மக்கள் அனுபவிக்கும் வகையிலான ஒரு வித்தியாசமான சுற்றுலா மையம்தான் இந்த றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை (Reecha Organic).
இதேவேளை இங்கு பல விதமான காய்கறிகளும் பயிரிடப்பட்டுள்ள நிலையில், எமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தரமான காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் மாபெரும் எதிர்கால நோக்கத்தையும் கொண்டது றீ(ச்)ஷா பண்ணை.
புதிய முயற்சியாக றீ(ச்)ஷா பண்ணைக்கு வரும் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட்டுக்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அவற்றில் தற்போது இரு விளையாட்டுகள் மக்கள் பாவனைக்காக விடப்பட்டுள்ளதுடன், இலக்கை அடைந்து வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசும் காத்திருக்கிருக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை தொகுத்து வழங்குகிறது இக் காணொளி,