இலங்கை மக்களை ஏமாற்றும் நபர் - மோசடி குறித்து எச்சரிக்கை
இலங்கையில் மக்களை இலக்கு வைத்து இடம்பெறும் நூதன மோசடி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
நபர் ஒருவர் நீண்ட காலமாக மக்களின் அனுதாபங்களை பெற்று தமக்கான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகிறார்.
சனநெரிசல் உள்ள பகுதிகள், வாகன நெரிசலுள்ள பகுதிகளில் அரிசியை திட்டமிட்டு கீழே கொட்டி விட்டு, அதனை அள்ளுவது போன்று நடித்து வருகிறார்.
கொழும்பை இலக்கு வைத்து மோசடிகள்
இதனை பார்கும் மக்கள் ஏமாற்றம் அடைந்து அவர் மீது அனுதாபம் கொண்டு பெருந்தொகை பணத்தை வழங்குகின்றர்.
கடந்த காலங்களின் கொழும்பை இலக்கு வைத்து இந்த மோசடிகள் இடம்பெற்று வந்தன.
தற்போது நாட்டில் பல பகுதிகளுக்கு செல்லும் தொடருந்துகளில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை தெரிய வந்துள்ளது.
இது குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Yoy may like this Video