பதின்ம வயதினரை குறி வகைக்கும் இன்ஸ்டாகிராம்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பதின்ம வயது சிறார்கள் தற்கொலை அல்லது சுய தீங்கு தொடர்பான ஆபத்தான உள்ளடக்கங்களைச் சமூக வலைதளங்களில் தேடும் போது, அது குறித்து அவர்களது பெற்றோருக்குத் தானியங்கி எச்சரிக்கை (Alert) அனுப்பும் புதிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தவுள்ளது.
பிரித்தானியாவில் இணைய பாதுகாப்பு தொடர்பான விவாதங்கள் வலுவடைந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய வசதி அறிமுகம்
அதிலும் குறிப்பாக, தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் வகையிலான பதிவுகளைச் சிறுவர்கள் அணுகுவதைக் கட்டுப்படுத்தத் தவறும் பட்சத்தில், 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிப்பது குறித்தும் பிரித்தானிய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

ஏற்கனவே 'டீன் அக்கவுண்ட்ஸ்' (Teen Accounts) மூலம் பல்வேறு கட்டுப்பாடுகளை மெட்டா நிறுவனம் நடைமுறைப்படுத்திய நிலையில், பெற்றோர்களுக்கு நேரடியாகத் தகவல் தெரிவிக்கும் இந்த புதிய அம்சம் சிறார்களின் மனநல பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam