தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகக்குழு தெரிவு நாளை
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.
நாளைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் கொழும்பு தமிழ் சங்கத்தின் மாலதி மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகக் குழு தெரிவும் நடைபெறள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தற்போதைய தலைவராக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



