புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கான அடிப்படைப் பணிகள் நிறைவு
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளுக்கான முக அடையாளம் மற்றும் கைரேகை தரவுகள் சேகரிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
இந்த தரவு சேகரிப்பு நடவடிக்கையை எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்று (18.01.2024) ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அடிப்படைப் பணிகள் நிறைவு
மேலும் தெரிவிக்கையில், புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதற்கான உள்கட்டமைப்புகள் தற்போது தயாராகி வருகிறது.
குடிமக்களின் தரவுகள், கைரேகைகள் மற்றும் முகத்தை அடையாளம் காணுதல் தொடர்பான தரவுகள் சேகரிப்பு அனைத்து பிராந்திய செயலகங்கள் ஊடாக எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 21 மணி நேரம் முன்
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam