ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
பொலிஸாரின் குறைபாடுகள் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் சஹ்ரான் உள்ளிட்டவர்களை கைது செய்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் தரப்பில் பாரிய கவனயீன குறைப்பாடு ஏற்பட்டமையை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கை
குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் யுக்திய நடவடிக்கை எந்த காரணத்திற்காகவும் நிறுத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நாட்டின் குற்றச்செயல்களின் எண்ணிக்கை 17 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றுக்கும், சட்டத்தரணிகளுக்கும் தேவையானவாறு தாம் செயற்பட போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை அமைப்புக்களுக்கு அஞ்சப் போவதில்லை
மனித உரிமை நிறுவனங்களை தாம் கண்டுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த யுக்திய நடவடிக்கையில் தனிப்பட்ட ரீதியில் கிடைப்பதற்கோ இழப்பதற்கோ எதுவுமில்லை எனவும், இந்த அமைச்சுப் பதவியில் கடமையாற்றுவதற்கு இடமளிக்கப்படாவிட்டால் இதனை தூக்கி எறிந்து விட்டு செல்வேன் எனவும், இதில் எவ்வித இலாபமும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        