இலங்கை கல்வி கட்டமைப்பில் ஏற்படவுள்ள மாற்றம் - மாணவர்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள்
பாடசாலை மட்டத்திலிருந்தே தொழில்முனைவு பற்றிய புரிதலும் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி முறை மூலம் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவர்கள் தமது பெற்றோருடன் கலந்தாலோசித்து எதிர்கால வாழ்க்கையை தெரிவு செய்யும் வாய்ப்பினை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கல்வியின் முதன்மை நோக்கம் அறிவு, மனப்பான்மை மற்றும் திறன்களைக் கொண்ட குடிமகனை உருவாக்குவதாகும்.
தேசிய கல்வி நிறுவனம்
எனவே முன்பள்ளிக் கல்வியில் இருந்தே திறன்கள் மற்றும் மனப்பான்மைகளை வளர்ப்பதற்குத் தேவையான அடித்தளத்தை ஏற்படுத்துவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்காக யுனெஸ்கோ மற்றும் தேசிய கல்வி நிறுவனம் மற்றும் பிற அறிஞர்களின் ஆதரவுடன் ஒரு திட்டம் தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் பாடசாலைகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan