தர்மசக்கரமா அசோக சக்கரமா என்பது குறித்து நாடாளுமன்றில் எழுந்த சர்ச்சை
புதிய கல்வி சீர்திருத்த கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பௌத்த சமய பாட மொடியுலில் தர்ம சக்கரத்திற்கு பதிலாக அசோக சக்கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இது ஓர் பாரிய பிழை எனவும் இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மொடியுலில் போடப்பட்டிருப்பது தர்மசக்கரம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்த ஆவணங்களை ஆதாரத்துடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அரச இலட்சினையில் காணப்படும் தர்மசக்கரம் இந்த மொடியுலில் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த கல்வி சீரமைப்பு நடவடிக்கைகளை ஒரு கிரமமான முறையில் சரியான வழிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளுமாறு கோருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வரலாறு பாடத்தை விருப்பத்தறிவு பாடமாக மாற்றியமை உள்ளிட்ட பல விடயங்களில் தமக்கு உடன்பாடு கிடையாது இந்த விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, குறித்த புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டு இருப்பது பௌத்த விவகார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட இலச்சினை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து மற்றும் அஸ்திரி பீடாதிபதிகளும் இந்த இலச்சினை சரியானது என்பதனை உறுதி செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மற்றுமொரு தர்மசக்கர இலட்சிணையும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் பெற்ற இலச்சினையை மொடியுலில் பயன்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam