புதிய கல்வி சீர்திருத்த பரீட்சை முறைமை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
புதிய கல்வி சீர்திருத்தத்துக்கு அமைய பாடசாலைகளில் தரம் 9 மற்றும் 11 ஆம் தரங்களில் தடைதாண்டல் பரீட்சையை நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தில் தெளிவற்ற தன்மை காணப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
புதிய கல்வி சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கல்வி மறுசீரமைப்பு
கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் 2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் மறுசீரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ட்டன. இருப்பினும் அதனை செயற்படுத்த முடியவில்லை.
தற்போதைய அரசாங்கத்தின் சிறந்த விடயங்களை செயற்படுத்துவதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
நடைமுறைக்கு சாத்தியமான வகையில் கல்வி முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்பில் 7 முதல் 9 ஆம் தரம், 9 முதல் 11 தரம், 11 முதல் 13 ஆம் தரம் என்ற அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
9 மற்றும் 11 தரங்கள்
9 மற்றும் 11 தரங்களில் தடைதாண்டல் பரீட்சையை நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த அடிப்படையில் என்பதில் தெளிவற்ற தன்மை காணப்படுகிறது.
பாட தெரிவுகளின் போது விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். வரலாறு மற்றும் அழகியற் கலை பாடங்களை இரண்டாம் நிலையாக்காமல் அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
மேலும், புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சகல தரப்பினருடனும் அரசாங்கம் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
