விசேட தேவையுடைய மாணவர்களுக்காகத் திறக்கப்படும் புதிய கதவுகள்!
இலங்கையிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உட்கட்டமைப்பு வசதிகள்
இதன்படி விசேட தேவையுடைய மாணவர்கள் பல்கலைக்கழக சூழலில் சிரமமின்றி கல்வி கற்கத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஏற்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு சில பல்கலைக்கழகங்களில் மட்டுமே இம்மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
ஆனால், எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் இசை (Music) போன்ற துறைகளிலும் அவர்களை இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.