தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள், செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் செயல்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.
இதன்படி, 1998 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தனியார் பாதுகாப்பு முகவர் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி அமைச்சின் கீழ் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ள தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களின் ஒழுங்குமுறை மற்றும் பதிவுக்கான உரிம நிபந்தனைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும் உரிமம் காலாவதியாகும் மூன்று மாதங்களுக்கு முன்னர் அடுத்த 02 வருடங்களுக்கான நீடிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தண்டனைக்குரிய குற்றம்
இதற்கிடையில், செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் செயல்படுவது 1998 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தனியார் பாதுகாப்பு முகமைகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அமைச்சு சுட்டிகாகாட்டியுள்ளது.
மேலும், தனியார் பாதுகாப்பு முகவர் உரிமம் மற்றும் பதிவு நீட்டிப்புக்கான கூடுதல் தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பெறலாம் என அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.defence.lk.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
