யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதி தெரிவு
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
புதிய பீடாதிக்கான தேர்தல் இன்றைய தினம் காலை இடம்பெற்றிருந்தது.
இதன்போது மருத்துவ பீட, பீடச் சபை உறுப்பினர்களிடையே இடம்பெற்ற வாக்கெடுப்பில் வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் 22 வாக்குகளைப் பெற்று, 4 மேலதிக வாக்குகளால் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக கோவிட் தடுப்புச் செயலணியின் இணைப்பாளராகப் பதவி வகிக்கும் வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன், மருத்துவ பீட சமுதாய மருத்துவத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார்.
இவர், சமுதாய மருத்துவத் துறையின் தலைவராக 2012 முதல் 2019 வரை பதவி வகித்துள்ளார் என தெரியவருகிறது.
மேலும், மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜின் பதவி காலம் நிறைவு பெற்றுள்ள நிலையில் இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam