அடுத்த ஆண்டு 2 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் - பிரதமர் ஹரிணி
அடுத்த ஆண்டில் 2 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் இன்று (18.10.2026) கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் 1ஆம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய கல்வி முறை உருவாக்கம்
தற்போதைய அரசாங்கம் நாட்டின் அனைத்து பிள்ளைகளினதும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய கல்வி முறையை உருவாக்கியுள்ளது.
வெறும் பரீட்சைகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு படிக்கும் மாணவர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, எதிர்கால சவால்களை நம்பிக்கையுடனும் வெற்றியுடனும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.

ஆசிரியர் ஆட்சேர்ப்பு
17000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் எதிர்வரும் நவம்பர் 20, 2026 முதல் தொடங்கவுள்ளது. பல்கலைக்கழக அமைப்பிற்கு 2000 கல்விப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு, அதற்கான நடைமுறைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் கல்வித் துறை முழுவதும் சுமார் 30,000 புதிய ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறப்புத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்
பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan