இலங்கையின் பல பகுதிகளில் புதிய கோவிட்-19 வைரஸ்
இலங்கையின் பல பகுதிகளிலிருந்து புதிய மாறுபாட்டைக்கொண்ட கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சு தயாராக உள்ளது என்று சுகாதார சேவைகள் உதவிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் தற்போதைய வழிகாட்டுதல்களில் ஏதேனும் மாற்றங்களை அறிமுகப்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் மிக விரைவில் பொருத்தமான சுற்றறிக்கைகளை வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவிட்19 பரவலுக்கு மத்தியில் அதிகாரிகள் ஏன் எந்த தடைகளையும் விதிக்கவில்லை என்று சிலர் வாதிடலாம்.
சில பகுதிகளில் முடக்கலை விதித்தால், அது அன்றாட வருமானம் ஈட்டுபவர்களை கடுமையாக பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நாங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்று முடிந்தவரை முயற்சிக்கப்பட்டது. சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு மக்களிடம் தொடர்ந்து கோரப்பட்டது. எனினும் அது உரியமுறையில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதால், தற்போது பிரச்சனைகள் எதிர்கொள்ளப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் வைரஸின் புதிய மாறுபாடு சுற்றுலாப்பயணிகள் மூலம் நாட்டிற்குள் நுழைந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் சாத்தியமில்லை எனினும் அதற்கான உறுதியான காரணத்தை அறிய மேலதிக விசாரணை நடத்தப்படுவதாக என்றும் கூறியுள்ளார்.
கோவிட்டின் புதிய மாறுபாடு கண்டறியப்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அரிதாகவே சென்று வந்தனர்.
எனவே, இந்த வைரஸ் சுற்றுலாப்பயணிகளால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது என்று ஒருவர் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.