ஜனாதிபதி பணிக்குழுவின் பரிந்துரைப்படி வெளியிடப்படவுள்ள புதிய சுற்றறிக்கை
மணல், மண், சரளை மற்றும் களிமண் சுரங்கம், போக்குவரத்து மற்றும் வர்த்தகத்திற்கான அனுமதிகளை வழங்குவதற்கான நடைமுறைக்கு புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பணிக்குழுவின் பரிந்துரைப்படி இந்த சுற்றிக்கை வெளியிடப்படவுள்ளது.
அகழ்வாராய்ச்சி, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் போன்ற செயல்பாடுகளில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சட்டரீதியான அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைக்காகவே இந்த பணிக்குழு அமைக்கப்பட்டது.
இந்த பரிந்துரையின் படி,. உலோகம், மணல், மண், சரளை மற்றும் களிமண் ஆகியவற்றின் சுரங்கம், போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri