தனியார் பேருந்துகளில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்
தனியார் பேருந்துகளில் கட்டணம் செலுத்தும் நவீன முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
கையடக்கத் தொலைபேசியின் ஊடாக, கியூஆர் குறியீட்டு (QR CODE) நடைமுறை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டணம் செலுத்தும் திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார்.
அட்டை முறைமை மற்றும் QR CODE எதிர்வரும் 24ம் திகதி முதல் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டணம் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 163 இலக்க பேருந்து மார்க்கமான தெஹிவளை – பத்தரமுல்ல மார்க்கத்தின் பயணிக்கும் ஒரு பேருந்தில் இதனை முதல் கட்டமாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
