இலங்கையின் 2022 சுதந்திர தினத்தில் புதிய மாற்றம்!
இலங்கையின் 74வது சுதந்திர தினம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் புதிய யோனை முன்வைக்கப்பட்டுள்ளது.
வழமையாக மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்படும் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச் சிலையுடன் மேலதிக பண்டாரநாயக்கவின் உருவச் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதே அந்த புதிய யோசனை.
கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த யோசனை முன்மொழிந்துள்ளார்.
இதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார். “1956 ஆம் ஆண்டு புரட்சியின் பின்னரே உண்மையான சுதந்திரம் கிடைத்தது. இதனால், சேனாநாயக்கவுக்கு மாத்திரமல்ல பண்டாரநாயக்கவுக்கு மலர் மாலை அணிவிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துடன் பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை எப்படி தேடுவது என்ற கேள்வியை முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள நாணயக்கார, உருவச்சிலை இருக்கும் இடத்திற்கு சென்றாவது மலர் மாலை அணிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri