பங்குச்சந்தைக்கு புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி நியமனம்
கொழும்பு பங்குச்சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக விந்தியா ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பங்குச்சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடந்த 11 வருடங்கள் பதவி வகித்த ரஜீவ பண்டாரநாயக்க ஓய்வுபெறும் நிலையிலேயே அப்பதவிக்கு விந்தியா ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விந்தியா ஜயசேகர கொள்முதல் மற்றும் விற்பனை சந்தை உள்ளிட்ட நிதிச்சந்தையிலும், முதலீட்டு வங்கிச்சேவை மற்றும் சொத்து முகாமைத்துவத்துறையிலும் பல வருடகால அனுபவமுடையவர் என தெரிவிக்கப்பட்டுகிறது.
சிரேஷ்ட முதலீடு
இதற்கு முன்னர் என்.டி.பி சொத்து முகாமைத்துவ லிமிடெட் நிறுவனத்தின் சிரேஷ்ட முதலீட்டு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
மேலும், விந்தியா ஜயசேகர, அக்காலப்பகுதியில் சுமார் 380 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட சொத்துக்களை திறம்பட முகாமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |