யோஷித மீது மீண்டுமொரு வழக்கு தாக்கல்: விசாரணையில் அம்பலமான தகவல்!
சட்டவிரோத பண மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் ஆகிய இருவருக்கும் எதிராக பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட விசாரணையின்படி, யோஷிதவினால் பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்து நியாயமான விளக்கத்தை வழங்க முடியாத காரணத்தினால், பொலிஸாரால் பணமோசடி சட்டத்தின் கீழ் குறித்த இருவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய விசாரணையின்படி, டெய்சி ஃபோரஸ்ட்டுடன் கூட்டுக் கணக்காக நிலையான வைப்புத்தொகை மற்றும் வங்கி வைப்புத்தொகைகளில் பணம் பராமரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
யோஷித ராஜபக்ச
அதன்படி, டெய்சி ஃபோரஸ்ட்டை இதற்காக சந்தேக நபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, இன்று (11) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபோரஸ்ட்டை சந்தேக நபர்களாக பொலிஸார் பெயரிட்டு, பணமோசடி சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், புத்திக மனதுங்க கூறுகையில், “
டெய்சி ஃபோரஸ்ட்டுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும், நீதிமன்றத்தின் மூலம் வழக்குத் தொடரப்படும்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan