ஹரக் கட்டாவுக்கு எதிராக புதிய வழக்கு! பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் குற்றப்பத்திரிகை
பிரபல போதைப் பொருள் வர்த்தகரும் பாதாள உலகப் புள்ளியுமான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்னவுக்கு எதிராக புதிய வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்த நிலையில் தப்பிச் செல்ல முயன்றமை உள்ளிட்ட 50 குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹரக் கட்டா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த காலகட்டத்தில் அவர் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ரவிந்து சந்தீப குணசேகரவும் இந்த வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார்.
குற்றப் பத்திரிகை
அத்துடன் ஹரக் கட்டா, ரவிந்து சந்தீப, தினேஷ் தரங்க, மிதிகம ருவன் என்றழைக்கப்படும் ருவன் சாமர, சஞ்சீவ அபேசிங்க ஆகியோர் இந்த வழக்கின் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று(05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பலத்த பாதுகாப்புடன் ஹரக் கட்டா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதனையடுத்து, சந்தேக நபர்களுக்கு குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைக்கு ஹரக் கட்டாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவு நிறைவுற்றதும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர் தொடர்ந்தும் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

அன்று சாப்பாட்டுக்கே வழியில்லை... இன்று 30 கோடி நிறுவனத்தின் முதலாளி: நடிகர் சூர்யாவே காரணம் Manithan

டெஸ்ட் வரலாற்றில் 1 ரன்னில் த்ரில் வெற்றிகள்: மிகச்சிறிய வித்தியாசத்தில் முடிந்த டாப் 10 போட்டிகள் News Lankasri
