அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவையில் புதிய நடைமுறை
பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளுக்கான புதிய முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், காலி வரை பயணிக்கும் பேருந்துகளுக்காக, கொட்டாவ - மகும்புர மல்டிமோடல் சென்டரில் முதன்முறையாக முற்பணம் செலுத்தப்பட்ட பேருந்து அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு தேவையான தொகையை முற்கூட்டியே செலுத்தி பேருந்து அட்டையை பயன்படுத்த முடியும்.
எதிர்கால திட்டம்

தற்போது மக்கள் வங்கியில் பாதுகாப்பான கட்டண நுழைவாயிலின் கீழ் மாத்திரமே இந்த பேருந்து அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.
பொதுப் போக்குவரத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக எதிர்வரும் காலங்களில் பேருந்து அட்டை முறையை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளது.
மேலும் தொடருந்து சேவைகளுக்கும் இவ்வாறான அட்டை முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளது.”என கூறியுள்ளார்.
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam