பிரித்தானிய பொதுத்தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய வேட்பாளர்
பிரித்தானிய பொதுத்தேர்தலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, பிரெக்ஸிட் சம்பியன் என்று அழைக்கப்படும் நைகல் ஃபரேஜ்(Nigel Farage) போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இவரது அறிவிப்பு, அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கின் பழமைவாதி தரப்புக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் மிகவும் திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஆர்வலர்களில் ஒருவராகக் கருதப்படும் நைஜல் ஃபரேஜ், ஜூலை 4ஆம் திகதி பிரித்தானிய பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நைஜல் ஃபரேஜ்
பிரெக்சிட்டின் "கட்டமைப்பாளரும்" பிரித்தானிய அரசியலை சீர்குலைக்கும் சக்தி விட கூறப்படும் நைஜல் ஃபரேஜ், தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கிளாக்டன் தொகுதியில் வேட்பாளராக நிற்கும் தனது விருப்பத்தை அறிவித்துள்ளார் .
இதற்கு முன் ஏழு முறை போட்டியிட்டு, ஒருமுறைகூட நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், இந்த தேர்தலில் மிகப் பாரிய மாற்றத்தை உண்டாக்கலாம் என கூறப்படுகிறது.
அவரது பிரசாரத்தின் மூலம் மக்களிடையே புதிய ஆற்றலைப் புகுத்தலாம் என்றும், இதனால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அதன் நீண்ட கால வாக்காளர்களை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |