நாளை பதவியேற்கும் புதிய அமைச்சரவை! அநுர மற்றும் விஜிதவிற்கு பலமான அமைச்சுக்கள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளைய(18) தினம் பதவியேற்கவுள்ளது.
நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மற்றும் அமைச்சரவை
மேலும், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உள்ளடங்களாக தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவை 50 பேரைக் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், புதிய அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) பதவியேற்கவுள்ளதாகவும், விஜித ஹேரத்திற்கு(Vijitha Herath) ஒரு பலமான அமைச்சுப் பதவியை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் வைத்திருக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
