ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்! பசிலின் அறிவிப்பு
அனைத்துக் கட்சி அரசாங்கம் யதார்த்தமானதாக இல்லாவிட்டால் புதிய அமைச்சரவையை கூடிய விரைவில் நியமிக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு கால அவகாசம்
கடந்த அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களாக இருந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு கட்சி கால அவகாசம் வழங்கும்.
எவ்வாறாயினும் அனைத்துக் கட்சி அரசாங்கமும் யதார்த்தமானதாக இல்லாவிட்டால் புதிய அமைச்சரவையை கூடிய விரைவில் நியமிக்க வேண்டும் என பசில் தெரிவித்துள்ளார்.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
