மகிந்த அமரவீர சற்றுமுன் அமைச்சராக பதவியேற்பு: மேலும் சிலருக்கும் நியமனம்
ஏற்கனவே 13 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சர்கள் மேலும் சிலர் பதவிப்பிரமாணம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இந்த பதவிப் பிரமாணம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சராக மகிந்த அமரவீர பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அத்துடன்,
டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில் அமைச்சர்
பந்துல குணவர்தன - வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை
கெஹெலிய ரம்புக்வெல்ல - நீர் வழங்கல்
ரமேஷ் பத்திரன - கைத்தொழில் அமைச்சர்
விதுர விக்ரமநாயக்க - புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர்
அஹமட் நசீர் - சுற்றாடல் அமைச்சர்
ரொசான் ரணசிங்க - நீர்பாசனம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் ஆகியோரும் நியமனம் பெற்றுள்ளனர்.
| புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! ஹரின், மனுஷவிற்கும் அமைச்சர் பதவி (Video) |
| நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம் |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri