தமிழர்களை அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றவா புதிய புத்த கோயில்கள்! சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

Sri Lanka Upcountry People Sri Lankan Tamils Jaffna Northern Province of Sri Lanka Buddhism
By Theepan May 08, 2023 12:01 PM GMT
Report

''வடக்கின் பல பகுதிகளில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு புதிதாகக் கட்டப்படும் புத்த கோயில்கள் தமிழர்களை அவர்களது தாயகப் பிரதேசத்திலிருந்து விரட்டியடிப்பதற்கான முயற்சியா'' என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ''இலங்கை சுதந்திரம் அடைந்தபோதும் டொனமூர் அரசியல் சட்டம் நடைமுறையில் இருந்தது.

தமிழர்களை அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றவா புதிய புத்த கோயில்கள்! சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி | New Buddhist Temples To Be Built In Jaffna

டொனமூர் யாப்பு

சிறுபான்மை இனத்திற்கு எதிராக எந்த சட்டமும் கொண்டுவரக்கூடாது என்று அந்த அரசியலமைப்பில் 29ஆம் சரத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அந்த 29ஆவது சரத்து இருக்கத்தக்கதாகவே ஒட்டுமொத்த மலையக தமிழர்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றவர்களாகப்பட்டார்கள்.

மேலும் அவர்களது சிவில் அரசியல் சமூக உரிமைகளும் மறுதலிக்கப்பட்டது. இதன் பின்னர், தென்பகுதியில் இருந்த தமிழ் மக்களின் வர்த்தகங்களை குறிவைத்து அவற்றை இல்லாமல் செய்து 1956இலும் 1977, 1981, 1983 போன்ற பல சந்தர்ப்பங்களில் தென்பகுதியில் இருந்த வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் மாத்திரமல்லாமல் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்களும் அவர்களது தாயக பிரதேசமான வடக்கு மற்றும் கிழக்கிற்கு கப்பல் மூலமும் விமானம் மூலமும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

தமிழர்களை அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றவா புதிய புத்த கோயில்கள்! சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி | New Buddhist Temples To Be Built In Jaffna

தற்போது வடக்கு மற்றும் கிழக்கைக் குறிவைத்து அங்குள்ள புராதன சைவ ஆலயங்களை உடைத்து, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, தான்தோன்றித்தனமான முறையில், தனிநபர்களின் காணிகளையும் கபளீகரம் செய்து, அவற்றில் புத்தகோயில்களைக் கட்டுவது மாத்திரமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள பலநூறு ஏக்கர் காணிகளையும் சுவீகரித்து அதற்கு இராணுவ பாதுகாப்பையும் வழங்கி தொடர்ச்சியாக சிங்கள குடியேற்றங்களையும் செய்து வருகின்றார்கள்.

இவ்வாறு யுத்தத்திற்குப் பின்னர், ஹம்பாந்தோட்டை போன்ற தூரப் பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சிங்கள மக்களை வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் குடியேற்றி வருகின்றார்கள்.

சிங்களக் குடியேற்றங்கள்

கிழக்கில் ஏற்கனவே முக்கியமான பகுதிகளில் மிகப்பாரியளவிலான சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய சிங்கள பிரதிநிதித்துவங்களும் உருவாக்கப்பட்டுவிட்டது.

இப்பொழுது வடக்கு மாகாணத்தில் மீண்டும் ஒருமுறை தமிழீழக் கோரிக்கைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் இருக்க வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தின் மக்கள் தொகையில் 25வீதம் சிங்கள மக்களாக இருக்க வேண்டும் என அரசாங்க இராணுவ உயர் மட்டங்கள் முடிவெடுத்துச் செயற்படுகின்றன.

இதன் வெளிப்பாடாகவே வடக்கு மற்றும் கிழக்கில் 1000 புத்த விகாரைகளைக் கட்டுவதற்கு 2018ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கோடிக்கணக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.

தமிழர்களை அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றவா புதிய புத்த கோயில்கள்! சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி | New Buddhist Temples To Be Built In Jaffna

இதன் மூலம் வடக்கின் குடிசனப் பரம்பலை மாற்றி அவர்களது நாடாளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து வடக்கையும் ஒரு கலவர பூமியாக மாற்றி தமிழ் மக்களை அங்கிருந்தும் விரட்டுவதே மாறிமாறி ஆட்சிக்கட்டிலில் ஏறும் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கின்றது.

ஏற்கனவே யுத்தத்தின் காரணமாக ஏறத்தாழ 1.5 மில்லியன் மக்கள் அவர்களது தாயகப் பிரதேசத்திலிருந்து விரட்டப்பட்டுவிட்டார்கள்.

இலங்கை அன்னிய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமென்பதற்காக தமிழ் மக்களும் இன, மத பேதமின்றி போராட்டக்களத்தில் முன்னின்று போராடினார்கள்.

அந்தக் காலத்தில் தமிழ் மக்கள் தனிநாட்டிற்காகவோ அல்லது சுயாட்சிக்காகவோ போராடவில்லை.

ஆனால் சுதந்திரமடைந்ததன் பின்னர், சிங்கள அரசியல் தலைமைகள் கொண்டுவந்த தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறை சட்டதிட்டங்களும் மொழி, கல்வி, வேலைவாய்ப்பு, அபிவிருத்தி போன்றவற்றில் காட்டிய பாரபட்சமும், தமிழ் மக்களை அவர்களது சொந்தப் பிரதேசங்களில் இருந்து விரட்டி விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழ் மக்களின் இருப்பையும் அவர்களின் தனித்துவத்தையும் இல்லாமல் செய்வதற்கு முற்பட்டவையுமே தமிழ் மக்களை சுயாட்சிக்காகவும் பின்னர் தனிநாட்டிற்காகவும் போராடும் சூழ்நிலைக்குத் தள்ளியது.

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசம்

இலங்கையின் தென்பகுதியில் இனமோதல்களை உருவாக்கி, தமிழர்களுக்கு அவர்களது தாயகப் பிரதேசமான வடக்கு - கிழக்குதான் பாதுகாப்பான பிரதேசம் என்ற அடிப்படையில் அவர்களை வடக்கு - கிழக்குப் பிரதேசத்திற்கு விரட்டியடித்ததுடன் அரசே கப்பல்கள் மூலம் தமிழ் மக்களை அப்பிரதேசங்களுக்கு அனுப்பியும் வைத்தது.

இவ்வாறான நடவடிக்கைகள் அரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் இந்திய மற்றும் இலங்கை ஒப்பந்தத்தினூடாக வலியுறுத்தப்பட்டதுமான எமது தாயகபூமியான வடக்கு - கிழக்கிலிருந்தும் அரசின் நடவடிக்கையினூடாக நாம் விரட்டியடிக்கப்பட்டால் நாம் எங்கே செல்வது?

உலகின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமெனவும் சிறுபான்மை தேசிய இனங்கள் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் பழங்குடியின மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர்களை அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றவா புதிய புத்த கோயில்கள்! சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி | New Buddhist Temples To Be Built In Jaffna

இதற்கமைய அழிவிலிருக்கின்ற உயிரினங்களும் தாவர இனங்களும் காப்பாற்றப் படவேண்டும் என்றும் குரலெழுப்பும் ஐ.நா. சபையும் சர்வதேச சமூகமும் இலங்கை அரசின் இவ்வாறான விடயங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும் கண்டிக்காமல் இருப்பதும் இலங்கை அரசின் தமிழர் விரோத செயற்பாட்டிற்கு உலகநாடுகளும் ஐ.நா. சபையும் துணைபோகின்றதா என்ற அச்சத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இப்பொழுது, வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி, மிகப்பெருமளவிலான வேகமான சிங்கள பௌத்த மயமாக்கல் என்பது ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவம் காப்பாற்றப்படவேண்டுமாக இருந்தால், அவர்களின் இருப்பு காப்பாற்றாப்படவேண்டுமாக இருந்தால், அவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அரசாங்க தனது சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனைகளைக் கைவிட்டு சகல இனங்களும் இந்த மண்ணில் தமது சொந்தப் பிரதேசங்களில் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக இந்தியா இந்த விடயங்களில் தனது தீவிர கவனத்தைச் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கிளிநொச்சி

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US