நபர் ஒருவரின் இரக்கமற்ற செயல்! கொழும்பில் பாலத்திற்கடியில் கிடந்த பச்சிளம் குழந்தை
தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், பிறந்து ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் தெமட்டகொட பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த குழந்தையை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தை
மீட்கப்பட்ட குழந்தை ஒரு துணியில் சுற்றப்பட்டு பாலத்தின் அடியில் கைவிடப்பட்டிருந்த நிலையில், குழந்தையை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் குறித்த சிசுவை அந்த இடத்தில் விட்டுச் செல்வது அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தை ஓரிரு தினங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
