மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்
மன்னார் (Mannar) மறை மாவட்டத்தின் புதிய ஆயராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தற்போது மருதமடு அன்னை திருத்தல பரிபாலகராக பணியாற்றிவரும் இவர் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டு, அச்செய்தியை திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி ஊடாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பேராலயத்தின் மணியோசை
இந்நிலையில் இன்றையதினம் (14) மாலை 4.15 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட அறிவிப்பை அறிவித்தார்.

இதன்போது பேராலயத்தின் மணியோசை எழுப்பப்பட்டது.
இந்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர், மறைமாவட்ட அருட்தந்தையினர், அருட்சகோதரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் மறைமாவட்டம் உருவாகி 43 வருடங்களை கடக்கும் நிலையில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த முதல் ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ தனது 75 வது வயதில் ஓய்வு பெற்றுச் செல்ல உள்ள நிலையில் மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri