இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய தடை
இலங்கையினுள் பரவி வரும் கோவிட் வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் 8 நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, அங்கொலா, போட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, சுவிட்சர்லாந்து, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நாடுகளுக்கு சென்று திரும்பிய பயணிகள் மற்றும் இடைமாறல் பயணிகள் ஆகியோரும் இந்த தடைக்கு உட்படுவர் என அவ்வதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை இந்த தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
