பிரித்தானியாவில் விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய தடை
பிரித்தானிய மகாராணியாரின் பாதுகாப்பு கருதி, அவர் தங்கியிருக்கும் விண்ட்சர் மாளிகையிலிருந்து 2,500 அடி தொலைவுக்குள் ட்ரோன்களோ, விமானங்களோ பறக்க, தடை விதிக்கப்படவுள்ளது.
ஜனவரி 27 முதல், மகாராணியார் வாழும் விண்ட்சர் மாளிகையிலிருந்து 2,500 அடி தொலைவுக்குள் ட்ரோன்களோ, விமானங்களோ நுழையக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு எச்சரிக்கையை மீறி 2,500 அடிக்கு தாழ்வாக பறக்கும் விமானங்களை அகற்ற போர் விமானங்கள் அனுப்பப்படும் என்பதுடன், ட்ரோன்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று, அம்பெய்யும் கருவி ஒன்றுடன் மர்ம நபர் ஒருவர் விண்ட்சர் மாளிகைப் பகுதியில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மகாராணியாரின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan