புதிய சட்டமா அதிபராக சஞ்சய ராஜரட்ணம்
சட்டமா அதிபர் திணைக்களத்தின் பதில் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற பேரவை நேற்று முற்பகல் அதன் தலைவர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதனிடையே இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் உறுப்பினராக சஞ்ஜீவ ஜயவர்தனவை மீண்டும் நியமிக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்த பரிந்துரைக்கும் நாடாளுமன்ற பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனை தவிர காணாமல்போனவர்கள் தொடர்பான செயலகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஜயந்த சாந்த குமார விக்ரமரத்னவும் இழப்பீடு தொடர்பான செயலகத்தின் உறுப்பினராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டப்ளியூ.பீ.பீ.பெர்னாண்டோவையும் நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பேரவையின் இந்த கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/b6b960dd-630d-4e70-b0a7-f029c87b0e63/25-67ab21be2ee71-sm.webp)