இங்கிலாந்தில் அடைக்கலம் கோருவதற்காக மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சி முறியடிப்பு
இங்கிலாந்தில் அடைக்கலம் கோருவதற்கான புதிய மோசடி ஒன்றை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம்(29) மாலை இடம்பெற்றுள்ளது.
மும்பைக்குச் செல்லவிருந்த முல்லைத்தீவை சேர்ந்த 29 வயதான ஆண் ஒருவரை கைது செய்தபோதே இந்த தகவல் வெளியானது.
விசாரணைகளில் வெளியான தகவல்கள்
இதன்படி, இங்கிலாந்துக்குச் செல்வதற்காக, விமானத்தில் ஏறுவதற்கான ஆவணமான போர்டிங் பாஸை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு பின்னர் புகலிடம் கோருவதாகக் கூறப்படும் ஒரு அதிநவீன மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மும்பைக்கு சென்ற இங்கிலாந்தில் குடியுரிமைப் பெற்ற ஒருவரும் குறித்த முல்லைத்தீவு குடியிருப்பாளரும், மும்பையில் சந்தித்து தமது போர்டிங் பாஸ்களை மாற்றிக்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் சிங்கப்பூருக்கும் இங்கிலாந்துக்கும் பயணிக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக தயாரிக்கப்பட்ட போலியான இரண்டு பிரான்ஸ் மற்றும் ஸ்பானிய கடவுச்சீட்டுக்களும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த கடவுச்சீட்டுக்களை தயாரிக்க முகவர் ஒருவருக்கு 90 இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |