அறிமுகமாகியது மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி: சில மணிநேரங்களில் பல இலட்சம் கணக்குகள்
மெட்டா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ‘த்ரெட்ஸ்’ Threads செயலியில் மிக விரைவாக பல லட்சம் பேர் புதிய கணக்குகளை உருவாக்கி வருகின்றனர்.
இந்த செயலி இன்றையதினம் (07.06.2023) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலக பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலாக ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை வேகமாக சரிய தொடங்கியுள்ளது.
ப்ளூ டிக்கிற்கு கட்டணம், ட்வீட் பார்ப்பதற்கு அளவுகோல், பணியாளர்கள் பணி நீக்கம் என ட்விட்டரின் செயற்பாடுகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில்தான் மெட்டா நிறுவனம் தனது புதிய Threads செயலியை உலகம் முழுவதும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலி அறிமுகமான 2 மணி நேரத்திற்கு 2 மில்லியன் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. 4 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை 5 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் உள்நுழைவு
த்ரெட் செயலியில் கணக்கு உருவாக்க இன்ஸ்டாகிராம் கணக்கு இருந்தாலே போதுமானது. மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் உள்நுழைவு (log in) செய்யும்போது இன்ஸ்டாகிராமில் ஃபாலோ (follow) செய்யும் நபர்களை அப்படியே த்ரெட்ஸிலும் ஃபாலோ(follow) செய்து கொள்ளலாம்.
✨ Threads is here – a new app where you can share updates and join convos ✨
— Instagram (@instagram) July 5, 2023
Use your Instagram account to log in and get started ? https://t.co/eEyTigO7WB pic.twitter.com/mCNsx33ZVg
டுவிட்டர் போலவே த்ரெட்ஸிலும் போட்டோ மற்றும் வீடியோவை பதிவுடன் இணைக்கும் வசதி உள்ளது. 500 வார்த்தைகளுக்கு மேற்படாமல் இதில் பதிவிட முடியும். இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே ப்ளூடிக் பெற்ற கணக்குகள் இதிலும் ப்ளூடிக்குடனே செயற்படும்.
சர்ச்சைக்குரிய பதிவுகள் நீக்கம்
இதுதவிர கமெண்ட் பதிவில் வரும் மோசமான கமெண்ட்களை தானாக நீக்கம் செய்யும் வசதி இதில் உள்ளது. Mentions ல் எந்த வார்த்தைகள் கமெண்டில் இடம்பெற கூடாது என்பதை பதிவு செய்து விட்டால் அந்த வார்த்தைகளை பயன்படுத்தி இடம்பெறும் கமெண்டுகள் தானாக மறைந்துவிடும்.
இந்த த்ரெட்ஸில் ட்விட்டரில் உள்ளதுபோல ட்விட்டர் ஸ்பேஸஸ், ஹேஷ்டேக் ட்ரெண்டிங் வசதிகள் காணப்படவில்லை. ட்விட்டர் போல த்ரெட்ஸுக்கு PC Web version இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். எனினும் அடுத்தடுத்து கூடுதலாக பல அம்சங்கள் இடம்பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
