புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பரில் நிறைவடையும் என்று அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன கூறியுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று (27) நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சில் கூடியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் இரண்டாவது முறையாக ஆராயப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்காலிக ஏற்பாடுகள்
நாட்டில் நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் எண் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை இரத்து செய்து புதிய சட்டத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலுடன் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், ஹர்ஷன நாணயக்காரவால் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
நவீன உலகளாவிய பயங்கரவாதத்தின் சவால்களை எதிர்கொள்வது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனிநபர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவது இந்த சட்டமூலத்தை முன்வைப்பதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
