New Anthoney's Farmsஇன் தயாரிப்பு தெரிவு 500 மில்லியன் முதலீடு
New Anthoney's Farms தனது பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்பு தெரிவுகளில் மேலும் ரூபா 500 மில்லியனை முதலீடு செய்துள்ளது.
முன்னணி நிலைபேறான கோழி இறைச்சி உற்பத்தியாளரான New Anthoney's Group, தனது அன்ரி பயோட்டிக் இல்லாத ஹரிதஹரி கோழி இறைச்சி தெரிவுகளுக்காக புகழ்பெற்றுள்ளதுடன், தனது பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்பு தெரிவை விரிவாக்கம் செய்வதற்காக மேலதிகமாக ரூபா 500 மில்லியனை முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அத்துடன், தனது உயர் தர தயாரிப்பு தெரிவான Chicken Havensஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆறு மாதங்களுக்குள் உற்பத்தியின் திறனை நான்கு மடங்காக உயர்த்தும் நோக்குடன் செய்யப்படும் இந்த விரிவாக்கம், இலங்கையின் கோழி இறைச்சி தொழிற்துறைக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணத்தைக் குறிக்கிறது.
தற்போது, New Anthoney's நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் சுமார் 10வீத மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளாக உள்ளன.
இந்த புதிய முதலீடானது, HORECA துறைக்கும் சில்லறை விற்பனைச் சந்தைக்கும் சமையல் நிபுணர் தரத்திலான பெறுமதி சேர்க்கப்பட்ட கோழி இறைச்சித் தெரிவுகளை வழங்கும் நாட்டின் முன்னணி விநியோகஸ்தராக இந்நிறுவனத்தை திகழச் செய்யும். விரிவாக்கப்பட்ட இந்த வசதிகள் அதிநவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளன.
உற்பத்தி திறன்
அத்துடன், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றன. இதில் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் போன்ற சுற்றுச்சூழல்-நட்பு நடவடிக்கைகள் மற்றும் நுகர்வோர் மற்றும் தொழில் துறையின் மாறிவரும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில், தற்போதைய அளவை விட நான்கு மடங்கு (4x) அதிக மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் திறனும் இதில் அடங்கும்.

New Anthoney's Farms (Pvt) Ltdஇன் மேலதிக பதப்படுத்தல் பிரிவின் தலைமை/வணிக முகாமையாளர் பிரியங்கா வினோதினி கருத்துத் தெரிவிக்கையில், "New Anthoney's இல் இறைச்சி என்பது சுவையில் சிறந்ததாகவும், அதன் மூலத்திற்கு உண்மையானதாகவும், நேர்மையான முறையில் பதப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
எமது கொள்கை இலாபமீட்டுவதற்கு அப்பாற்பட்டதுடன், வாடிக்கையாளர்களுக்கு அசல், நம்பத்தகுந்த உயர் தரமான இறைச்சியை வழங்குவதாக அமைந்துள்ளது. நாம் உருவாக்கும் ஒவ்வொரு தயாரிப்பும் புத்தாக்கம், நிலைபேறாண்மை மற்றும் நிகரற்ற தன்மை ஆகியவற்றுக்கான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதுடன் உங்களின் மேசையை வந்தடையும் தயாரிப்பு தூய்மையானதாகவும், சுவை நிறைந்ததாகவும் மற்றும் பொறுப்பு வாய்ந்த முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கும். "என்றார்.
இந்த விரிவாக்கம் நிறுவனத்தின் கவர்ந்திழுக்கக்கூடிய புத்தாக்கத் தடத்தைப் பின்தொடர்கிறது. இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அதன் முன்னோடியான Crizzpys Frozen Crispy Chicken மற்றும் Frenchys Chicken Fries போன்ற தனித்துவமான படைப்புகள் இதில் அடங்கும்.
Chicken Havens தயாரிப்பு தெரிவுகள், தொழில்முறை சமையலறைகள் மற்றும் பரபரப்பான வீடுகளின் முக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட கவனமாக உருவாக்கப்பட்ட எட்டு தயாரிப்புப் Chicken Ham, Chicken Bacon. Chicken Spicy Roll, Chicken Meat Balls, Chicken Kebab, Chicken Satay.
Chicken Burger Patties / Marinated Roast Chicken Marinated வகைத் தயாரிப்புகளும் அடங்கும். ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கேட்ரிங் செயற்பாடுகள் போன்றன நீண்ட காலமாக எதிர்நோக்கும் சவால்களை நேரடியாக நிவர்த்திக்கும் வகையில் புதிய தெரிவுகள் அமைந்துள்ளன. மாறுபட்ட அளவுகளிலான வெட்டுத் துண்டுகள், எதிர்வுகூரமுடியாத விளைச்சல்கள் அளவுக்கதிகமான தயாரிப்பு நேரம் மற்றும் உணவு பாதுகாப்பு கரிசனைகள் போன்றன பல வருடங்களாக நிபுணத்துவ சமையலறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
Chicken Havens இல் நியமப்படுத்தப்பட்ட பதப்படுத்தல் முறைகள் பேணப்படுகின்றன. அதனூடாக ஒரே மாதிரியான வெளிப்பாடுகள் உறுதி செய்யப்படுகின்றன. அதனால் கழிவுகள் குறைக்கப்படுவதுடன், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணவுப் பாதுகாப்பு கட்டமைப்புகளினூடாக இடர்கள் தணிக்கப்படும். நிபுணத்துவமான சமையல் நிபுணர்களை கவனத்தில் கொண்டு Chicken Havens உருவாக்கப்பட்டுள்ளதுடன், சாதாரண விற்பனை நிலையங்களிலும் விரைவில் இந்தத் தெரிவு அறிமுகம் செய்யப்படும்.
அதனூடாக உணவக-தர புரதத்தை இல்லங்களின் சமையலறைகளுக்கும் கொண்டு வரக்கூடியதாக இருக்கும். தயாரிப்புகளில் இறைச்சி செழுமையான உணவு தயாரிப்பு முறைகள் தெளிவான புரத உள்ளடக்கத்துடனும், சமையல் நிபுணர்களால் உறுதி செய்யப்பட்ட சேர்மானங்களும் சமைக்கத் தயாரான சௌகரியத்தையும், தொடர்ச்சியான புரத அளவுகளையும் கொண்டுள்ளன.
பிரியங்கா தொடர்ந்தும் தெரிவிக்கையில், "மக்கள் இல்லங்களிலும், உணவகங்களில் கிடைக்கும் சுவையை எதிர்பார்க்கின்றனர்.
தரச்சான்றிதழ்
இல்லங்களுக்கு பாதுகாப்பு தங்கியிருக்கக்கூடிய புரதம் மற்றும் சௌகரியம் ஆகிய உறுதி மொழியை வழங்குகிறோம். இறைச்சி செறிந்த உணவு தயாரிப்பு முறைகளினூடாக குறைந்த நேரத்தில் அதிக சுவை மற்றும் சிறந்த செழுமையை எதிர்பார்க்கின்றனர்."என்றார்.
1986ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், நாட்டின் முன்னணி நிலைபேறான கோழி இறைச்சி உற்பத்தியாளர் எனும் கீர்த்தி நாமத்தை கட்டியெழுப்பியுள்ளதுடன் நாட்டில் முதன் முதலாக FSSC 22000 சான்றிதழைப் பெற்ற உற்பத்தி பகுதி முதல் முழு விநியோக தொடரையும் அன்ரி பயோட்டிக் இல்லாத உற்பத்திப் பகுதியாக பேணுகிறது.

ஏனைய சான்றிதழ்களில் GMP, HACCP, ISO 22000 மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஹலால் சான்றிதழ்கள் போன்றன அடங்கியுள்ளன. மேலும் தனது ஹரிதஹரி கோழி இறைச்சி தெரிவுகளுக்காக 100 சதவீதம் கொம்போஸ்ட் ஆகக்கூடிய பொதியிடல் தீர்வை பற்றிய முதலாவது நிறுவனமாகவும் அமைந்துள்ளது.
சமீபத்தில் கிடைத்த அங்கீகாரங்களில், 26ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளர் விருது பெற்றதும் அடங்கும் மேலும் மாலைத்தீவில் நடைபெற்ற ஹோட்டல் ஆசியா கண்காட்சி 2025இல், இந்நிறுவனம் தனது புத்தாக்கத் திறன்களைப் பிராந்திய பார்வையாளர்களிடம் காட்சிப்படுத்தியதுடன், அங்கு தொழில் வல்லுநர்களிடமிருந்து 100வீத நேர்மறையான கருத்துக்களைப் பெற்றது.
உள்நாட்டு சந்தை அறிமுகம் தவிர்க்க முடியாததாகவும், ஏற்றுமதி பிரிவுகள் விரிவாக்கமடைந்து வரும் நிலையில், Chicken Havens என்பது, புரதம் நிறைந்த, தொடர்ச்சியாக தரத்தைப் பேணி தயாரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான முறையில் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி தயாரிப்புகளை நாடும் எவருக்கும் நம்பிக்கையை வென்ற தயாரிப்பாக அமைந்துள்ளது.