அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெளிவுபடுத்தினார்.
அரசின் வருவாயைப் பெருக்க வேண்டிய தேவை வலுவாக உள்ளது என்றார். அரசாங்க வருமானம் போதவில்லை என்றால், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் பணத்தை அச்சிட வேண்டும். அந்த நடைமுறையை மத்திய வங்கி மேற்கொள்ள வேண்டும். அதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
அரசாங்க வருவாயை அதிகரிக்க வேண்டும். சம்பளம் கொடுக்க முடியாத நிலை இல்லை. ரூபாவை மத்திய வங்கி எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் அதை நிதானத்துடன் கொடுக்க வேண்டும்.
தேவையான வரிகளை உயர்த்துவதன் மூலம் வருவாயை அதிகரிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஆதாரங்கள் கூட எங்களிடம் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam